மாவீரர் துயிலுமில்லங்களின் மகிமை கடந்த நான்கு வருடங்களாக மறக்கப்பட்டிருந்து. இராணுவத் துப்பாக்கி முனையில் அவ்வாறானதொரு தற்காலிக மறதி உருவாகியிருந்தது. ஆனால் ஆழ்மனதில் மாவீரர்களுக்கான தீபம் ஒளிர்ந்து கொண்டேயிருந்தது.
அதன் பிரதிபலிப்பையே தேர்தலில் பார்த்தோம். மாவீரர் துயிலுமில்லங்கள் மீள அமைப்பப்படும் என்ற தேர்தல் உறுதிமொழிகள் மிகவும் கவர்ச்சிகரமானவையாக மாறியிருக்கின்றது. தெற்கில் சர்ச்கைக்குரிய கவர்ச்சியாகவும், வடக்கில் எழுச்சிமிகு கவர்ச்சியாகவும் இந்த தேர்தல் உறுதிமொழி அவதாரமெடுத்திருக்கின்றது.
அதன் பிரதிபலிப்பையே தேர்தலில் பார்த்தோம். மாவீரர் துயிலுமில்லங்கள் மீள அமைப்பப்படும் என்ற தேர்தல் உறுதிமொழிகள் மிகவும் கவர்ச்சிகரமானவையாக மாறியிருக்கின்றது. தெற்கில் சர்ச்கைக்குரிய கவர்ச்சியாகவும், வடக்கில் எழுச்சிமிகு கவர்ச்சியாகவும் இந்த தேர்தல் உறுதிமொழி அவதாரமெடுத்திருக்கின்றது.
இந்த நிலையில், வட மாகாணசபை அமைக்கப்பட்டதிலிருந்து அந்தக் கதை கைவிடப்பட்டதாகவே தெரிகின்றது. தேர்தலுக்குப் பின்னர் மாவீரர் துயிலுமில்லங்கள் அமைப்பது பற்றிய எந்த அறிக்கைகளும், மேடை முழக்கங்களும் வெளியாகவில்லை. எனவேதான் இதுவும் வெறும் தேர்தல் முழக்கமாக மாறிவிடுமோ என்ற ஐயம் எழுந்திருக்கின்றது. ஆனால் தமிழ் தேசியத்தையும், கடந்த 3 தசாப்தகால ஆயுதப் போராட்டத்தையும் நேசிக்கும் மக்களும், அதனை பிரதிபலிக்கும் அரசியல் தலைமைகளும் மாவீரர் துயிலுமில்லங்களை நிராகரிக்கமாட்டார்கள். அது அவர்களின் கனவிலும், நினைவிலும் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். அதற்கு ஆதாரமாக நம் மத்தியில இருக்கும் கதைகள்; நீண்ட ஆயுள் பெற்றவை. மறந்து, மண்ணள்ளி போட்டுவிட்டு, கடந்துபோக முடியாதவை.
குரல்-1
நான் தற்போது மன்னாரில் போரில் உறவுகளை இழந்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருக்கின்றேன.; என்னுடைய அப்பா மீளிணைக்கப்பட்ட போராளியாக இயக்கத்திற்கு சென்று இராணுத்தின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது. எனக்கு பின்னர் இரண்டு தம்பிமார்.; எங்கள் மூன்று பேரையும் அம்மா மிகவும் கஸ்டத்தின் மத்தியில் வளர்த்தார் ஆனாலும் மாத்தளனில் வைத்து தம்பிக்கு கஞ்சி வாங்க போன அம்மா திரும்பி வரவில்லை நான் தேடிப் போகும்போது அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் இரண்டு தம்பிகளையும் பாதுகாக்க பெரும்பாடுபட்டேன். தற்போது என் தம்பியாக்களோடு இந்த விடுதியிலே தங்கியிருக்கின்றேன். வன்னிக்கு எங்களின் காணியை பார்க்க போகும் போதெல்லாம் என்னுடைய அம்மா, அப்பாவின் நினைவுதான் வரும். என்னுடைய அப்பாவை புதைத்த இடத்திற்கு அருகில் இரண்டு தென்னைகள் நின்றன. ஆனால் தற்போது அந்த மரம் வேரோடு பிடுங்கப்பட்டு அநத இடத்தில் சிங்களத்தினால் எழுதப்பட்ட வாசகம் ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கின்றது. அதை பார்க்கும் போதெல்லாம் பெரிதாக அழவேண்டு;ம் போல் இருக்கின்றது. என்னுடைய அப்பாவின் இறந்த தினத்தைக்கூட நிம்மதியாக கொண்டாட முடியாமல் இருக்கிறது.
குரல்-2
;என்னுடைய கணவர் இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்புக்குப் பின்னர் என் இரு பிள்ளைகளையும் ஓவ்வொரு கோயில் திருவிழாக்களிலும் கச்சான் விற்றே வளர்த்தேன். சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் பசிக்காக பிச்சைக்கூட எடுத்திருக்கின்றேன.; இருந்தும் 2000 ஆம் ஆண்டு என்னுடைய மூத்த மகன் இயக்கத்திற்கு போய் சேர்ந்தான். அதே வருடத்தில் முகமாலை சண்டையில் வீரச்சாவை தழுவிக்கொண்டான். அவனது உடல் விசுவமடு துயிலுமில்லத்தில் புதைக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தேன.; அவனுக்கு ஒரு பிள்ளையும் பிறந்தது. ஆனாலும் அந்தக்கால கட்டத்தில் கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் எல்லைபாதுகாப்பிற்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த சந்தர்ப்பத்திலே அவனையும் பறி கொடுத்தேன். தற்போது என்னுடைய மருமகளுடன் சேர்ந்திருக்கின்றேன.; என்னுடைய மகன்களின் நினைவு வரும்போதெல்லாம் அழுவேன.; கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று வீட்டுக்கு முன்னால் தீபம் ஏற்றினே;. அதனை இராணுவத்தினர் பிடுங்கி எறிந்து எச்சரித்து விட்டும் சென்றார்கள். எங்களுடைய பிள்ளைகளைக்கூட நிம்மதியாய் வழிபட முடியாமல் இருக்கின்றேன்.
குரல்-3
1983 கலவரத்திற்கு பின்னர் பாதுகாப்பிற்க்காக வன்னியை நோக்கி செல்ல வேண்டியிருந்தது அங்கே திருமணமாகி சில வருடங்களுக்கு பின்னர்;; மூன்று பிள்ளைகளின் தந்தையும் ஆனேன் என் மனைவி இராணுவத்தின் உலங்குவானூர்தி தாக்குதலில் என் கண்முன்னே இறந்துவிட்டாள் பின்னர் போரின் வேகமும் அதிகரிக்க மூத்த மகன் இயக்கத்தில விடுதலைப் போராட்டத்தில் இணைந்தான். ஒரு வருடத்திற்கு பின்னர் ஜெயசிக்குரு சண்டையில் வீரச்சாவை தழுவிக்கொண்டான். அவனின் கல்லறை முள்ளியவளை துயிலுமில்லத்தில் இருக்கின்றது.
புpன் வந்த காலத்தில் என்னுடைய இரண்டாவது மகளும் போராடப் போனாள். இவள் போய் சேரும் போது ஜெயசிக்குரு சண்டை உச்சத்தை பெற்றிருந்தது. நான் இவளை என்னோடு சேர்ப்பதற்கு எடுத்த முயற்சி எல்லாமே தொல்வியிலேயே முடிந்தது. போராட்டத்திற்கு சேர்ந்து மூன்று மாதங்களில் மகளும் என்னை விட்டு சென்று விட்டாள.; பெட்டி கூட திறக்கப்படாத நிலையில் முள்ளியவளை துயிலுமில்லத்தில் அடக்கம் செய்தார்கள். அதன் பின்னர் என்னுடைய கடைசி மகனை பாதுகாக்க தொடங்கினேன். இறுதி போரில் அவனையும் இழந்தேன.; தற்போது தனிமையாக அலைகிறேன். ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினம் வரும்போதெல்லாம் என்னுடைய பிள்ளைகள் நினைவாகவே இருக்கின்றது. என் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில்; பெரிய கட்டடங்கள் வளர்ந்திருக்கின்றது. அந்த வீதியால் செல்லும் போதெல்லாம் நான் திரும்பி பார்ப்பேன். என்; பிள்ளைகளை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வேன். இன்னும் சில காலத்தில் திரும்பி பார்ப்பதும் தடைசெய்யப்படலாம்.