இதுநவீனயுகம். எல்லாவிடயங்களிலும் நவீனம் தலைவிரித்தாடுகின்றது. சாப்பிடுவது,வேலைசெய்வது,உறங்குவது என்று அனைத்திலும் தொழில்நுட்பகருவிகள் வியாபித்துநிற்கின்றன. ஏமாற்றுவதிலும்,கொள்ளையடிப்பதிலும்தான். அதுவும் நமக்குமிகஅருகில் வந்திருக்கிறதுநவீனகொள்ளை.
62 வயதுமதிக்கத்தக்க இவர் யாழ்பாணம் அரியாலையைபிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். அங்கேதான் வாழ்ந்தும் வருகின்றார். போரில் தன் முழுச்சொத்தையும் இழந்து,தற்போது தனிமையை சொத்தாக்கியிருக்கிறார். யாழ்ப்பாணகச்சேரியில் பணியாற்றிய இவர்,ஓய்வு பெற்றபின்னர்,வாழ்க்கைச ;செலவைபார்த்துக் கொள்வதற்காக திருநெல்வேலி எரிபொருள் நிரப்புநிலையத்தில் முகாமையாளராகப் பணியாற்றிவருகின்றார்.
அண்மைக்காலமாக இவருடைய தொலைபோசிக்கு புதிய எண்கள் சிலஅறிமுகமாகத் தொடங்கியிருக்கின்றன. அவருக்கு வயதுமுதிர்ந்த காரணத்தால் இதனை எல்லாம் பெரிதாககணக் கெடுக்கவில்லை. அவரும் அவரின் வேலையும் என்று இருந்துவிட்டார். இருந்தாலும் அன்றையதினம் ஒருபுதிய இலக்கம் அவரது தொலைபேசிக்கு அறிமுகமாகியிருக்கின்றது.குறித்தநாளில் மட்டும்‘டயலொக்காரர்”என்றுஅறிமுகப்படுத்திக் கொண்டவர்கள்காலை 9..55தொடக்கம் பகல் 12 மணிவரைக்கும் ஏழு தடவைகள் அழைப்பெடுத்திருக்கின்றனர்.பின்னர்; இவரும் முகம் தெரியாதவர்களோடு உரையாடத் தொடங்கியிருக்கின்றார.;
‘…ஐயாநாங்கள் டயலொக் ஓவ்வீஸ்ல இருந்துகதைக்கிறம.; உங்களுக்கலோடொவ் ரீலோட் மூலம் ஐந்தரைலட்சம் ருபாயும் ஒருவோசிங் மிசினும் கிடைச்சிருக்கு...”என்று கூறியிருக்கின்றனர்.அடுத்தஅழைப்பில்,
“…ஐயா இன்டைக்கு நாலுமணிக்குமுதல் உங்களுடையபாங் புத்தகத்தின் போட்டோ கொப்பிரெண்டும்,ஐசிபோட்டோகொப்பிஏழும், இருபத்தைந்துருபாய் முத்திரைநாலும்,பைல் சைஸ்ல என்பலப் ஒன்டும,; பைல் கவர் ஒன்டும் உடனேதேவைப்படுது…”
அதற்குஅவரின் பதில்,
“..தம்பிஎன்னட்ட இப்பஎடுத்துதரவசதியில்லை.நான் இப்பவேலையில் நிக்கிறன்...”மீண்டும் அவர்கள் சொன்னார்களாம்,உங்களுடையஉள் வேலைசெய்வதற்குபத்தாயிரம் ரூபாய் காசுதேவைப்படுகின்றதுஅதனால் அருகில் உள்ளபோன் கடையில் ஈசீகாஸ் செய்யுங்கள.; ஆனால் நீங்கள் இந்த இலக்கத்தை கொடுக்கவேண்டாம.; தொலைபேசியைமட்டும் கொண்டுபோய் கடைக்காரரிடம் கொடுங்கள். வேறுஎதுவுமேயாரிடமும் சொல்லவேண்டாம.; சொன்னால் அதிஸ்டம் இல்லாமல் போய்விடும் என்றார்கள்.
அவரும்,அவர்கள் சொன்னபடியே பத்தாயிரம் ரூபாய் காசோடு அருகில் உள்ளகடைக்குப் போனார். அவர்கள் சொன்னதுபோலவே தொலைபேசியை மட்டும் கொடுத்துவிடயத்தை கடைக்காரரிடம் சொன்;னார் தற்போது ஐயாயிரம் ரூபாய் மட்டும்தான் அனுப்பமுடியும் மிகுதியைவேறுகடைக்குப் போய் அனுப்புங்கள் என்றார் கடைக்காரர். அடுத்தகடையில் இருந்து 5000 ரூபாயைஅனுப்பி,அவர்கள் கேட்டதொகையை அனுப்பிவிட்டார். அவருடைய வாழ்க்கையில் அன்றையதினம்தான் தெரியும் “டயலொக்காரர்”ஈசீகாஸ் என்றஒன்றும் வைத்திருக்கின்றார்கள் என்று. காசு அனுப்பிய உடனே“டயலொக்காரர்”அழைப்பெடுத்தார்கள்.“ஐயாஉங்களைபதிவுசெய்தாச்சி. உங்கடபோன அரைமணித்தியாலயம் ஓவ் பன்னுங்கோ”என்றார்கள்.அவருக்குசந்தேகமாய் இருந்தது. ஆவர்கள் சொன்னபடிதொலைபேசியை நிறுத்திவைக்கவில்லை.
மீண்டும் சிறிதுநேரத்தில்“டயலொக்காரர்”அழைப்பெடுத்தார்கள். “ ஐயாஎங்கடமனேச்சர் சொல்லுறார் உங்கட அதிஸ்டத்தைகுலுக்கள் முறையில் தெரிவுசெய்யிறதால, இன்னும் 9960 ரூபாய் தேவைப்படுது, இந்ததொகைஉங்களிட்ட இருக்கா”,என்றுகேட்டார்கள். என்னிடம் இப்போதுபணம் இல்லை. இப்ப உங்களைப் பார்க்கசந்தேகமாக இருக்கின்றது. அதனால் உங்களைமுதலில் உறுதிபடுத்துங்கள் என்றார் அவர். ஆனால் அவர்கள் உறுதிபடுத்தவில்லை.
உடனடியாகஅவர்“டயலொக்”அலுவலகத்துக்கு அழைப்பெடுத்து; நடந்த எல்லாவற்றையும் சொன்னார். அவர்கள் சொன்னார்கள்,“ஐயாஉங்களுடைய இந்த பிரச்சினையை நினைத்து மனம் வருந்துகின்றோம”; என்று கூறி என் தொடர்பை துண்டித்தார்கள். பின்னர் யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்துக்கு போனார் அவர். அங்கேயும் முறையிட்டார். அவர்களும் சொன்னர்கள்,உங்களின் செய்தியைகேட்கும் போது வருத்தமாகத்தான் இருக்கின்றது என்று.“கோப்பாய் பொலீஸ் நிலையத்திற்குபோய் முறைப்பாட்டப திவுசெய்யுங்கோ உங்களுடையகிளைஅதுதான்”என்றார்கள்.அவருக்கு இதில் பெரிதாகவிருப்பமில்லை.கோப்பாய் போகும் முடிவையும் நிறுத்திக்கொண்டார். மறு நாள் காலைமீண்டும் “டயலொக்காரர”; அழைப்பெடுத்தார்கள்.“ஐயாஅந்தகாசுரெடியா? எங்கட முகவரோட வடிவாககதைக்கேல்ல என்றார்கள். வயதானவர் கோபத்தோடுபேசினார். திட்டித்தீர்த்தார். தொலைபேசியை இடையேகட் பண்ணகி;கொண்டார்கள். பின்னர் அந்த இலக்கத்துக்கு அழைப்புபோகவில்லை. நிரந்தரமாகவே அமைதியாகிவிட்டது.
இது அண்மையில்,யாழின் அனைவரது கண்காணிப்பும் இருக்கின்றபகுதியில் நடந்தபகல்கொள்ளை. ஆனாலும் யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. நாள்தோறும் இது போன்ற கொள்ளைகளும்,ஏமாற்றுதல்களும் நம் மத்தியில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. யாரும் கண்டுகொள்வதுமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வெளியில் சொல்வதுமில்லை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றஎண்ணத்தில் பேசாமல் இருந்துவிடுகின்றனர்.
இவ் சம்பவம் தொடர்பில் பொலீஸாரி கருத்து
இவ் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைத்திற்கு சென்று கேட்ட போது இவ்வாரான சம்பவங்கள் குறிப்பாக இவ்வருடமே அதிகரத்திருப்பதாகவும் ஆனால் தங்களிடம் இது வரைக்கும் ஒரே ஒரு முறைப்பாடு குறிப்பாக மூன்று மாதங்களுக்கு முன்னர் வந்ததாகவும் பதிக்கப்பட்வர்களோடு தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்ட போது அவ் இலக்கம் செயல் இலக்கப்பட்டிருந்தது உடனடியாக டயலொக் முகவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது இவ் இலக்கம் பதிவில் இல்லை என்று குறிப்பிட்டார்கள் ஆனாலும் இவ் முறைப்பாடு தொடர்பாக உரிய விசாரணை இடம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்கள்;.அத்தோடு இவ்வாரான சம்பவங்கள் தொடர்பில் மக்கள் விழ்ப்பாக இருக்க வேண்டும.; உரிய முறையில கையாளாமல் விட்டால் தொடர்ச்சியாக அதிகித்துக் கொண்டு போகலாம் அதானால் இவ்வாரான சம்பவம் நடை பெற்றால் உடனடியாக பொலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ய வேண்டும் அவ்வாறு பதிவு செய்யும் பற்சத்தில் தான் குற்றவாளிகளை அடையாளம் கான முடியும் குற்றவாளிகளை அடையாளம் காணும் பற்சதத்தில் நம்பிக்கை துரோகம் என்ற என்ற சட்டத்தின் படி அவர்களுக்கு தண்டணை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
இவ் சம்பசம் தொடர்பில் டயலொக் நிறுவனத்தின் கருத்து
இவ் சம்பவம் தொடர்பில் யாழ். டயலொக் நிறுவனத்திடம் சென்று கேட்ட போது டயலொக் வாடிக்கையாளர்களுக்கு அண்மைக்காலங்களாக லோடொவ் ரீலோட்டின் அதிஸ்டம் மூலம் ஒரு நாளுக்கு அதிகமானோர் வெற்றி பெற்று செல்கின்றார்கள். அத்தோடு நாங்கள் அறிமுகப்படுத்திய லோடொவ் லோடொவ் ரீலோட்டுக்கு முன்னரே இவ்வாரான சம்பவங்கள் நிறைய நடந்தேரியிருக்கின்றன மக்கள் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் இவ்வாரான சம்பவம் தொடர்பில் இந்த வருடேமே அதிகமான முறைப்பாடுகள் வந்திருக்கின்றன ஆனால் இது தொடர்பாக எங்களால் உரிய நடவடிக்கையோ தண்டணையோ வழங்க முடியாது பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்து பதிவு தாளுடன் வரும் போது மட்டுமே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் ஆனால் மக்கள் அவ்வாறு வருவதில்லை அத்தோடு ஒரு வாடிக்கையாளர் லோடவ் ரீலோட் மூலம் வெற்றி பெற்று விட்டால் அவர்களுக்கு டயலொக்கில் இருந்து குறிஞ் செய்தியின் மூலம் பின் நம்பர் அனுப்பபடும் அதன் மூலமே தொடர் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்
இவற்றை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்
அண்மை காலங்களில் இவ்வாரான பண மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன யாழ் மாவட்டத்தை பொருத்த வரையில் டயலொக் நிறுவனத்தின் சிம் காட்டின் மூலமே இவ்வாரான சம்பவங்கள் நடந்தேருகின்றன வேறு நிறுவனங்களின் மூலமான பண மேசடி தொடர்பான முறைப்பாடுகள் எதுவுமே பதியப்பட வில்லை ஆகவே மக்கள் அணைவரும் வழிப்பாக இருக்க வேண்டும் அவ்வாரு யாராவது உங்களோடு தொடர்பு கொண்டால் உடனடியாக அவர்களை இனங்கானுங்கள் அதன் பின்னரே உங்கள் செயற்பாடுகளை முன் வைங்கள் டயலொக் நிறுவனத்தினர் எக்காரணம் கொண்டும் உங்களிடம் தொடர்பு கொண்டு பணங்களை ஈசி காஸ் பன்னச் சொல்லி கேட்க மாட்டார்கள்.அவ்வாறு பாதிக்கப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள்